Ads (728x90)

பிரதமரின் வேண்டு கோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை  14 இன் பிரகாரம் நாளை மறுநாள் புதன்கிழமை அவசர பாராளுமன்ற அமர்வை நடத்த சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு  சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பிணைமுறி தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget