ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இன்றுடன் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் 5வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலும் பெருமளவு பாதிப்பில்லை பல்வேறு மாவட்டங்களில் சராசரியாக 40 சதவீதத்திற்கும் மேலான பஸ்கள் ஓடத்துவங்கின.மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை அடுத்து நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. இதனையடுத்து மிரண்டுபோன ஊழியர்கள் பணிக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
இன்று கரூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 100 சதவீத பஸ்கள் ஓடுகிறது. போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர் சொந்த மாவட்டமாகும்.
மதுரை மாவட்டத்தில் 70 சதவீதம், திருவாரூரில் 70 சதவீதம், சென்னையில் 44 சதவீதம், குமரியில் 35, காஞ்சிபுரம் 50 , திருப்பூர் 32 , கோவையில் 56 சதவீத பஸ்கள் ஓடுவதாக அரசு பணிமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் மக்கள் சிரமம் இன்று முதல் குறையத்துவங்கியது. முழு அளவில் பஸ்கள் விரைவில் ஓடும் என தெரிகிறது.
Post a Comment