Ads (728x90)

இராணுவத்தை வடமாகாணத்தில் நிலைநிறுத்தி வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீடுகள் மற்றும் மலசலகூடங்களைக் கட்டிக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் ஈடுபடுவதன் மூலம் மக்களின் மனதைக் கவருவதற்கான நடவடிக்கைகளை இராணுவம் முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் தொடர்ந்தும் வடமாகாணத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது மக்களைக் கொன்றொழித்த, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியவர்களும் இதே இராணுவத்தினர்தான் என்பதை எம்மால் மறந்து விடமுடியாது. எனவே ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது. எமக்கான சமஸ்டி நிர்வாக அலகைக் கொண்ட அரசியலமைப்பை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு வழிகளை சிறிலங்கா அரசாங்கம் கண்டுபிடித்து வருகிறது.

எமக்கான பாதுகாப்பு மற்றும் நலன்களை எமக்கு வழங்கக்கூடிய சமஸ்டி நிர்வாக முறைமை கொண்டுவரப்படாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டேயிருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget