Ads (728x90)

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்  பதுளையில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக பதுளை நகரை சென்றடைந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பதுளை மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தஸநாயக்கவை பதவி விலக்கிமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால்  ஆளுநருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். குறித்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget