நுவரெலியாவின் வெப்ப நிலை அதிகமான அளவுக்கு குறைந்து பனிப்படர்வு காணப்படுவுதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவல் நாட்டில் பொதுவாக வறட்சியான காலநிலையே காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு மற்றும் காலை வேளைகளில் நாட்டில் பெரும்பாலான பிதேசங்களில் குளிரான காலநிலையே காணப்படும் என்றும் மேல் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்த மேற்படி திணைக்களம், வடக்கு கிழக்கில் தற்பொழுது குளிருடனான காலநிலை காணப்படுகின்றது என்றும் இதற்கு காரணம் வளிமண்டளத்தில் காணப்படும் ஈரப்பதனே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு இந்த காலநிலை பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்வுகூறியுள்ளது.

Post a Comment