Ads (728x90)

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான உறுப்பினர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர்.

முன்னதாக நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நடிகை ஷோபனா குழுவினரின் நாட்டியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

நிகழ்ச்சியில், சரோஜா தேவி, லதா, சிஐடி சகுந்தலா, விஜயகுமாரி, வெண்ணிறாடை நிர்மலா, செம்மீன் ஷீலா உள்ளிட்ட பல மூத்த நடிகைகளுக்கு உட்பட பலருக்கு ஐசரி வேலன் நினைவாக 1 சவரன் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தார் ஐசரி கணேசன். அப்போது நடிகை விஜயகுமாரி, நடிகர் சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி - ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது.

கோவை கிங்கிஸ் அணிக்கு கார்த்தி கேப்டனாக உள்ளார். இவரது அணியில் நந்தா, விஷ்ணு, அஸ்வின், பசுபதி, கலையரசன், உதயா மற்றும் பிளாக் பாண்டி இடம்பெற்றுள்ளனர்.

சேலம் சீட்டாஸ் அணிக்கு ஜீவா கேப்டன். இவரது அணியில் பிருத்வி, தினேஷ் மாஸ்டர், சரண், வசந்த் விஜய், நட்டி, செளந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.

மதுரை காளைஸ் அணிக்கு விஷால் கேப்டன். இவரது அணியில், ரமணா, அசோக் செல்வன், ரிஷி, ஆர்கே.சுரேஷ், அஜய், சாகி மற்றும் செந்தில் ஆகியோர் உள்ளனர்.

ராமநாடு ரைனோஸ் அணிக்கு விஜய் சேதுபதி கேப்டன். இவரது அணியில் ஜிவி பிரகாஷ், ஷாம், பரத், ஆதவ் கண்ணதாசன், போஸ்ட் வெங்கட், வருண், நாகேந்திர பிரசாத், அஸ்வின், கவுதம் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திருச்சி டைகர் அணிக்கு சிவகார்த்திகேயன் கேப்டன். இவரது அணியில் விக்ரம் பிரபு, சூரி, சதீஷ், அருண்ராஜா, சாந்தனு, பிரேம், ஹேமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சிங்கம் அணிக்கு சூர்யா கேப்டன். இவரது அணியில், அருண் குமார், விக்ரான், மிர்ச்சி சிவா, உதய், ஹரீஷ், அருண் பாலாஜி, சஞ்சய் பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து மலேசிய உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது.

விழாவின் நிறைவாக நடிகர் ரஜினியும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனும் விளையாட்டு போட்டிகளுக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.

நிகழ்ச்சியை வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், நடிகைகள் சங்கீதா, ரோகினி, சுஹாசினி, நடிகர் சுரேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ், ரஜினி, லதா ரஜினி, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், மலேசிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget