
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்துவிட்டார். தனிக்கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும், தன்னுடைய அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
மேலும் தனது ரசிகர்கள் மற்றும் மன்றங்களை ஒருங்கிணைக்க ரஜினி மன்றம் என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளார். இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களை இணைத்து வருகின்றனர். லட்சக்கணக்கில் ரசிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி மன்றம் என்று இருந்த தனது இணையதளத்தின் பெயரை, ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி உள்ளார் ரஜினி. இதன்மூலம் ரஜினி, தன் அரசியல் களத்தை வேகமாக முன்னெடுத்து செல்வது தெரிகிறது.
Post a Comment