Ads (728x90)

ஸ்ரீமந்துடு படத்தை அடுத்து மகேஷ்பாபு - கொரட்டல்ல சிவா இணைந்துள்ள படம் பாரத் அனே நேனு. ஸ்பைடர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பாரத் அனே நேனு படத்தின் பர்ஸ்ட் லுக்கை சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், நேற்று முதல் தோற்றம் வெளியிடப்படவில்லை.

இதனால் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், ஜனவரி 26-ந்தேதி அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அப்படக்குழு அறிவித்திருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget