தென்னிந்திய படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில், அய்யாரி படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், அடுத்தப்படியாக அஜய் தேவ்கன் உடன் இணைய உள்ளார்.இப்படத்தை அக்வி அலி இயக்க, லுவ் ரஞ்சன் மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை.
ஆக்ஷ்ன் கலந்த கமர்ஷியல் படமாக இந்தப்படம் உருவாகும் என தெரிகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்தமாதம் படம் துவங்கும் என தெரிகிறது.
Post a Comment