Ads (728x90)

சைவம் என்ற பெயரில் மாட்டிறைச்சி உணவுகள் பரிமாறப்படுவதாக, கேரளாவைச் சேர்ந்த ஒரு கல்லுாரியில் படிக்கும் வட மாநில மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

கேரள மாபிலம் ஆலப்புழா மாவட்டத்தில், கொச்சி பல்கலைக்கழகத்தின் குட்டநாடு பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. இந்தக் கல்லுாரியைச் சேர்ந்த வட மாநில மாணவர்கள், மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கூறியுள்ளதாவது: கல்லுாரி கேன்டீனில் சைவ உணவு என்ற பெயரில் மாட்டிறைச்சி உணவுகளை பரிமாறுகின்றனர். இது குறித்து கேட்டபோது, இது சைவ உணவு தான் என்கின்றனர். கல்லுாரி முதல்வரிடம் இது குறித்து புகார் கூறியும் நடவடிக்கை எதுவும் இல்லை.

எங்கள் மத உணர்வுகளை மதிக்காமல், வட மாநில மாணவர்களுக்கு மட்டும் இதுபோல் அசைவ உணவுகளை திட்டமிட்டு பரிமாறுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget