Ads (728x90)

பிரபுதேவா நடிப்பில் ரிலீஸாகியுள்ள ‘குலேபகாவலி’ படத்தைப் பாராட்டியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். கல்யாண் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்க, ரேவதி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

 இந்தப் படம் ரிலீஸான விஷயம் கூட யாருக்கும் தெரியவில்லை. காரணம், எந்த வித புரமோஷனும் இல்லாமல் ரிலீஸாகியிருக்கிறது இந்தப் படம்.
இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த ஜாலியான படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா, கல்யாண் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.

இந்தக் காமெடிப் படத்தைத் தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க” எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget