பழைய பேரூந்து நிலையத்தினை மூடியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வர்த்தகர்கள் கறுப்பு கொடியினை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.பழைய பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு வாகனங்கள் உட்செல்வதற்கு தடை செய்யப்பட்டு பேரூந்து நிலையத்திற்கு செல்வதற்கான பாதை மூடப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தர்கள் வர்த்தக நிலையங்களை மூடி கறுப்பு கொடிகளை வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக தொங்க விட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment