ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தில், காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்ற முயன்ற போது நடந்த தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஈரானில், பொருளாதார சுரண்டல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கும் அரசின் போக்கை கண்டித்து, அந்நாட்டு மக்கள், சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரான் அரசு, 'டிவி' செய்தியில் கூறியிருப்பதாவது:
ஈரானில், காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை கைப்பற்ற முயன்ற, ஆயுதமேந்திய போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் உட்பட, 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம், ஈரானில், 'இன்ஸ்டாகிராம்' மற்றும், 'டெலிகிராம்' எனும் குறுஞ்செய்தி அனுப்பும், 'ஆப்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிபர், ஹாசன் ருஹானி கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment