Ads (728x90)

பிரான்ஸின் முதல் பெண்­மணி பிறிஜிட் மக்ரோன், தான் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்­றிய போது இள­வ­ய­தா­க­வி­ருந்த தனது மாண­வரும் அந்­நாட்டின் எதிர்­கால ஜனா­தி­ப­தி­யு­மான இம்­மா­னுவேல் மக்­ரோ­னிடம் காதல் வசப்­பட்­டமை குறித்து அவ­ரது குடும்­பத்­தினர் கடும் கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­த­தாக அவர் தொடர்­பான புதிய சுய­ச­ரிதை நூலொன்று தெரி­விக்­கி­றது.

 மெல்லே பிறன் என்ற எழுத்­தா­ளரால் எழு­தப்­பட்ட 'பிறிஜிட் மக்ரோன்: லா­பி­ரான்சி' ( பிறிஜிட் மக்ரோன்: தடை­யற்ற பெண்) என்ற தலைப்­பி­லான புதிய சுய­ச­ரிதைப் புத்­த­கத்­தி­லேயே மேற்­படி தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

 அமியன்ஸ் பிராந்­தி­யத்தில் கேக் வர்த்­த­கத்தில் பிர­பலம் பெற்ற செல்­வந்தக் குடும்­பத்தில் மருத்­து­வர்­க­ளாக கட­மை­யாற்­றிய தாய்க்கும் தந்­தைக்கும் பிறந்து வளர்ந்து புனித ஆசி­ரிய பணியில் இணைந்து வங்­கி­யாளர் ஒரு­வரை திரு­மணம் செய்து கண்­ணி­ய­மான வாழ்க்கை வாழ்ந்த பிறிஜிட், தனது 38 ஆவது வயதில் லா புரோ­விடன்ஸ் லைசி தனியார் கத்­தோ­லிக்க பாட­சா­லையில் 14 வயது மாண­வ­ரான மக்­ரோனை என்று சந்­தித்­தாரோ அன்று முதல் தன்னால் அது­வரை கட்டிக் காக்­கப்­பட்டு வந்த கௌரவம், மரி­யா­தையை இழக்க ஆரம்­பித்­தி­ருந்த­தாக அந்த நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பிறி­ஜிட்­டிற்கும் மக்­ரோ­னுக்­கு­மி­டை­யி­லான காதல் தொடர்பை அறிந்த அய­ல­வர்கள் அவரது­ வீட்டு வாசலில் எச்­சிலை துப்பி அவரை அவ­ம­தித்­துள்­ளனர். அத்­துடன் பிறி­ஜிட்டின் பெற்றோர் கொள்ளை நோய் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களை ஒதுக்கி வைப்­பது போன்று சமூ­கத்தால் நடத்­தப்­பட்­டனர். இந்­நி­லையில் அவ­ரது பெற்றோர்

அவ­ரது காத­லுக்கு கடும் கண்­ட­னத்தை தெரி­வித்து எதிர்ப்பை வெளி­யிட்டு வந்­தனர்.

 அச்­ச­ம­யத்தில் பிறி­ஜிட்டின் நண்­பர்­களும் அவரை தீண்டத்தகாத ஒரு­வ­ராகக் கருதி விலகிச் செல்ல ஆரம்­பித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் அக்­காலப் பகு­தியை தன்னை மிகவும் காயப்­ப­டுத்­திய காலப் பகு­தி­யாக பிறிஜிட் தனது நண்­பி­யொ­ரு­வ­ரிடம் குறிப்­பிட்­டி­ருந்­த­தாக மேற்படி சுயசரிதை நூல் தெரிவிக்கிறது. பின்னர் பிறிஜிட், மக்ரோனை சட்டபூர்வமாக திருமணம் செய்து அவரை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி அவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget