Ads (728x90)

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவரை பற்றிய பல சர்ச்சைக்குரிய செய்திகள் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியாகிய வண்ணமே உள்ளது. சில நேரங்களில் ஊடகங்களின் விவாதப்பொருளாவும் ட்ரம்ப் உருவெடுத்தார்.
அதே சமயம் ஊடகங்களையும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக "சி.என்.என்", "தி நிவ்யோர்க் டைம்ஸ்" ஆகிய செய்தி நிறுவனம் மற்றும் பத்திரிக்கை மீது ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் கடந்த  2 ஆம் திகதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,
" இந்த வருடத்தின் நேர்மையற்ற, ஊழல் நிறைந்த ஊடகங்களுக்கான விருதை அறிவிக்க இருக்கிறேன். இந்த விருதுகள் பொய் செய்திகள், நேர்மையற்ற, தரமற்ற செய்திகளின் அடிப்படையில் வழக்கப்படுகிறது." என பதிவிட்டிருந்தார்.
கூறியது போல விருதுகளை வழங்கியும் உள்ளார்.  பிரபல அமெரிக்க நாளிதழான "நிவ்யோர்க் டைம்ஸ்" பத்திரிகைக்கு போலி செய்திகளுக்கான விருது வழங்கியுள்ளார்.
நேர்மையற்ற, பொய் செய்திகள் போன்ற இதர பிரிவுகளின் முறையே "ஏ.பி.சி" , "சி.என். என்", "தி வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகைகளுக்கு  வழங்கியுள்ளார்.
இவ் ஊடகங்கள்  ட்ரம்ப்பை எதிர்த்து செய்திகள் வெளியிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget