
முறி மோசடி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட 34 அறிக்கைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதன்போது பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதன் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படுவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இதனிடையே, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்திற்கான நாள் குறித்து, பிற்பகல் 2.30 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள விசேட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment