Ads (728x90)

பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்ட சகலரும் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டுவரையில் பொதுமக்களின் பணம் பெருமளவில் கொள்ளையிட்டப்பட்டுள்ளது.

அந்த கொள்ளையில் ஈடுபட்ட சகலருக்கும் நிச்சயம் தண்டனை உண்டு.

தாம் அன்று கட்சியில் இருந்து வெளியேறியதற்கும் ஊழல் மோசடிகளே காரணம்.

இந்தநிலையில் தவறிழைத்த அனைவரும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget