இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோரை காண வில்லை.இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பிரிபெஸ் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 5 விவசாயிகள் மண்ணில் புதைந்தனர். 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் 15 பேரை காணவில்லை. அவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment