Ads (728x90)

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்படையினரும் இணைந்து பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வழமை போல் யாழ் மறைமாவட்டத்திலிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையின் தென்பகுதியிலிருந்தும் ஏறக்குறைய 10ஆயிரம் யாத்திரிகள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தள விழா யாழ் மறைமாவட்ட ஆயர் பேரரர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் இணைந்து காலி மறைமாவட்ட ஆயர் பேரர் திரு பிறேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget