Ads (728x90)

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பின், அதனை ‘முதியோர் சமூகம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம். தற்போது சீனாவும் அந்த நிலைக்கு வந்திருக்கிறது. சீனாவில் சுமார் 24 கோடியே 10 லட்சம் பேர், 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது, சீன மக்கள் தொகையில் முதியவர்கள் 17.3 சதவீதமாக வியாபித்துள்ளனர்.

இந்த நிலை தொடருமேயானால், 2050-ம் ஆண்டு சீனாவில் 48 கோடி முதியவர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, நாட்டு மக்கள் தொகையில் 34.9 சதவீதமாகும். இவ்வாறு முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செயல்திட்டம் வகுத்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனாவில் 1979-ம் ஆண்டு ‘ஒரு குழந்தை கொள்கை’ அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், மறுபுறம் முதியோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. எனவே, இந்தக் கொள்கையை 2016-ம் ஆண்டு சீன அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget