“1044 தொண்டர் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டபோதும் 676 பேர் மட்டும் தகுதியுடையவர் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 182 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தமக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது“ என்று கூறியுள்ள தொண்டர் ஆசிரியர்கள், 676பேருக்கும் நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.இந்தக் கோரிக்கையை வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்து மனு ஒன்றைக் கையளித்துள்ளனர். நேற்று முன்தினம் வழங்கப்பட்ட அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,676 பேரில் 182 பேரின் பெயர் விவரங்கள் மட்டும் அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்த விடயம் சம்பந்தமாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம் சென்று எமது கோரிக்கைகளை முன்வைத்தபோது அவர்கள் தகுதியுடைய676 பேருக்கும் ஒரே மேடையிலேயே நியமனம் வழங்க கொழும்பு கல்வி அமைச்சருடன் பேசி முடிவெடுப்பதாக எமக்கு உறுதி மொழி கூறியிருந்தனர்.
தேர்தல் காலப்பகுதி நிறைவுடன் 676 பேருக்கு நியமனம் வழங்குவதாக உறுதி செய்யப்பட்டது. தற்போது 182 பேருக்குரிய நியமனங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று அறிந்துள்ளோம். நீண்டகாலமாக வேதனமின்றிப் பாடசாலைகளில் கடமையாற்றும் நாம் இதனால் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
Post a Comment