டர்பன் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் 33-வது சதத்துடனும், ரஹானேவுடன் கோலி அமைத்த கூட்டணியிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.இந்த வெற்றியில் ரஹானேயின் ஆட்டம் பற்றி விராட் கோலி ஆட்டம் முடிந்த பிறகு விதந்தோதினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் பேசியதாவது:
இது சிறப்பான வெற்றி, தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். டெஸ்டில் பெற்ற வெற்றி உத்வேகத்தை ஒருநாள் போட்டிகளுக்கும் கொண்டு வர விரும்பினோம்.
இந்தப் பிட்சில் தென் ஆப்பிரிக்காவை 270 ரன்களுக்கு மட்டுப்படுத்தினோம். ஜிங்க்ஸ் (ரஹானே) அபாரமாக ஆடினார், அவரது இன்னிங்ஸ் மகிழ்ச்சியளிக்கிறது. ரஹானே ஒரு டாப் கிளாஸ் பிளேயர். இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சு ஒரு பெரிய காரணியாக அமையும் என்பது தெரியும், ரஹானே வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடுகிறார்.
புவனேஷ் குமார், பும்ராவை நம்பியிருக்கிறோம், முதலில் ஓரிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது முக்கியம். இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் தனித்துவமாக வீசுகின்றனர். அணிக்காக அவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஆடுகின்றனர்.
சாஹல், குல்தீப் யாதவ் தைரியமானவர்கள், தைரியமாக வீசுகின்றனர் இதனால்தான் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். இரண்டு வீரர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவது ஒரு கேப்டனாக எனக்கு தனிச் சிறப்பு வாய்ந்ததாகத் தெரிகிறது.
Post a Comment