குளிர்கால ஒலிம்பிக் மகளிர் ஐஸ் ஹாக்கியில் அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது.தென் கொரியாவின் பியாங்சங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஐஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அமெரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஐஸ் ஹாக்கி கடந்த 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 20 ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்க மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை. இந்த வெற்றியின் மூலம் 4 முறை சாம்பியனான கனடா அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது அமெரிக்கா. கனடா அணி 24 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.
Post a Comment