வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை மீறியுள்ளதாக ஐ. நா. சபை குற்றஞ்சாட்டியுள்ளது.இதுகுறித்து ஐ. நா. சபை வெள்ளிக்கிழமை கூறும்போது, "வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறியுள்ளது. கடந்த வருடம் போலியான பாதைகள் மற்றும் தந்திரங்களை உபயோகித்து சுமார் 200 மில்லியன் டாலர்களை ஏற்றுமதியில் அந்நாடு வருவாயாக ஈட்டியுள்ளது.
மேலும் சிரியாவுக்கு ராணுவம் மற்றும் ரசாயன தாக்குதல் திட்டங்களை உருவாக்கவும் வடகொரியா ஒத்துழைப்பு அளித்துள்ளதற்கான சான்றும் உள்ளது" என்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணுகுண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
இதையடுத்து, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை மீறியுள்ளதாக ஐ. நா. சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஐ. நா. சபை வெள்ளிக்கிழமை கூறும்போது, "வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறியுள்ளது. கடந்த வருடம் போலியான பாதைகள் மற்றும் தந்திரங்களை உபயோகித்து சுமார் 200 மில்லியன் டாலர்களை ஏற்றுமதியில் அந்நாடு வருவாயாக ஈட்டியுள்ளது.
மேலும் சிரியாவுக்கு ராணுவம் மற்றும் ரசாயன தாக்குதல் திட்டங்களை உருவாக்கவும் வடகொரியா ஒத்துழைப்பு அளித்துள்ளதற்கான சான்றும் உள்ளது" என்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணுகுண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
இதையடுத்து, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment