Ads (728x90)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று நடைபெறுகிறது.

6 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. டர்பன் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளெஸ்ஸிஸை இழந்துள்ளது.

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் போட்டித் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்தும், இதைத் தொடர்ந்து நடைபெற உள்ள டி 20 தொடரில் இருந்தும் டு பிளெஸ்ஸிஸ் விலகி உள்ளார். ஏற்கெனவே காயம் காரணமாக டி வில்லியர்ஸ் விளையாடாத நிலையில் தற்போது டு பிளெஸ்ஸிஸூம் விலகி உள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் எஞ்சிய ஆட்டங்களில் எய்டன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுவார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மார்க்ரம் இதுவரை 2 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். மேலும் அணியில் பர்ஹான் பெகார்தின், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் பிளெஸ்ஸிஸூக்கு பதிலாக பெகார்தின் இடம்பெறக்கூடும். புதுமுக வீரரான ஹன்ரிச் கிளாசென் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். டி காக்கின் மோசமான பார்மை கருத்தில் கொண்டு ஹென்ரிச் கிளாசென் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் தோல்வியை சந்தித்தால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழக்க நேரிடும்

Post a Comment

Recent News

Recent Posts Widget