Ads (728x90)

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொது மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய எச்சரிக்கை என்று கூற யாராவது முனைவதாயின் அது தவறானதோர் பார்வையாகும்.

 மக்கள் மிகவும் ஆவேசத்துடன், உணர்வுகளின் அடிப்படையில், தெளிவாக அரசாங்கத்துக்கு அடித்த பலமான அடியாகவே இதனைப் பார்க்க வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் ராவய பத்திரிகையின் ஆசிரியருமான விக்டர் ஐவன், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியின் வெற்றி குறித்து அவரிடம் ஊடகமொன்று வினவியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைத் தெரிவு செய்ய திரண்டு வந்து வாக்களித்தது போன்று இந்த அரசாங்கம் 3 வருடங்களைக் கடந்ததன் பின்னர் இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியைப் போன்றதொரு உத்வேகமான படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இனியும் ஆத்ம திருப்தியுடன் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கத்துக்கு முன்னெடுக்க முடியும் என நான் கருதவில்லை. எந்தவொன்றையும் செய்யத் தெரியாத, செய்ய முடியாத ஒரு பலவீனமான அரசாங்கமாகவே கடந்த மூன்று வருடங்களில் மக்கள் இந்த அரசாங்கத்தைப் பார்த்துள்ளனர்.

 மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த பிரச்சினையை தீர்க்க உருவாக்கப்பட்ட அரசாங்கமும் தீர்வை வழங்க தவறியுள்ள ஒரு நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget