Ads (728x90)

பாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பி. களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால், பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வருடங்கள் கலைக்காமல் கொண்டு சென்று ஐந்து வருடத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே இந்த 70 உறுப்பினர்களினதும் எதிர்பார்ப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி ஐந்து வருடங்களை நிறைவு செய்வாராயின், அவருக்கு அவர் பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.

பாராளுமன்றத்திலுள்ள ஒரு உறுப்பினருக்கு கொடுப்பனவுகள் தவிர்ந்த மாதாந்த சம்பளமாக 54285.00 ரூபா வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget