Ads (728x90)

தமிழ் தேசிய அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது தொடர்பில் தாம் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் காலை முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பு தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தேர்தல் காலத்தில் முதலமைச்சரை சந்திக்க முடியாத நிலை இருந்தது. அதனால் இன்றைய தினம் நல்லெண்ண சந்திப்பாக சந்தித்தோம். இன்றைய சந்திப்பில் சம கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். குறிப்பாக தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் தொடர்பிலும் பேசினோம் என தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget