தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களை அந்தச் சபைகளின் உறுப்பினர்களே தீர்மானிக்கவுள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் இந்த விடயத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் என்பவற்றை, அந்தச் சபைகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களே தெரிவு செய்வார்கள். வெற்றி பெற்ற உறுப்பினர்களை விரைவில் அழைத்துச் சந்திப்பு நடத்தவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment