Ads (728x90)

அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தேர்தல் முடிவுகள் குறித்து அரசு ஆராய்ந்துள்ளது. எனினும் இந்த முடிவுகள் கூட்டணி அரசுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படத்தவில்லை. மாறாக, முன்பிருந்ததைவிட மிகக் கவனமாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.

“அதன்படி, ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளுடன் மேலும் பல முக்கியமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவிருக்கிறது. அதற்கு முன், அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடுத்த வாரத்தினுள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.”

இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget