இன்று முதல் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிவித்திருக்கிறார்.அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்தே சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
தேசிய அரசாங்த்தில் ஏற்பட்டுளள்ள நெருக்கடி நிலைமையானது உச்ச நிலையை அடைந்துள்ளதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனான சந்திப்பு நடைபெற்றது.
இதில் தயாசிறி ஜயசேகர திலங்க சுமதிபால சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போதே நல்லாட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால கூறியுள்ளதாவது
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கின்ற அரசாங்கத்தில் தாம் இருக்கமாட்டோம் என்று சுதந்திரக் கட்சி தெரிவித்ததையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.
எனினும் பிரதமர் பதவி விலகுவதற்கு மறுத்துவிட்டார். இந்நிலையில் இரண்டு கட்சிகளும் தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன. எனினும் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது
Post a Comment