யாழில் 5 லட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த ஒருவரை யாழ்ப்பாண காவற்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியில் வைத்து நேற்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்கில் அரியாலை பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment