Ads (728x90)

வடக்கு – கிழக்கு இணைப்பை மேற்­கொள்­வ­தற்கு, கிழக்­கில் தமிழ் மக்­கள் பெரும்­பான்­மை­யாக இல்லை. வடக்­கில் பெரும்­பான்­மையா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. வடக்கு – கிழக்கைப் பல­வந்­த­மாக இணைக்க முடி­யாது.
இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

அவர் வழங்­கிய செவ்வி ஒன்­றி­லேயே இவ்­வாறு கூறி­யுள்ளார்.

கேள்வி – சம­கா­லத்­தில் நில­வும் அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளுக்­க­ மைய புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வர முடி­யும் என்ற நம்­பிக்­கை­யுள்­ளதா?
பதில் – நாங்­கள் முயற்சிக்­கின்றோம். பார்ப்­போம் யார் எதிர்க்­கின்­றார்­கள் என்று. மக்­க­ளுக்­குத் தெரி­யும் யார் அதை எதிர்க்­கின்­ற­னர் என்று.

கேள்வி – கூட்டு அர­சின் முயற்­சி­க­ளில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­தால் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் வடக்கு மக்­க­ளி­டம் கடும் அழுத்­தத்­துக்­குள்­ளாகி வரு­கி­றாரே?
பதில் – அவ­ருக்­கும் பிரச்­சி­னை­யுள்­ளது. எமக்­கும் பிரச்­சி­னை­யுள்­ளது. அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைத்­துக் கொண்­டு­தான் இந்­தப் பய­ணத்தை முன்­னோக்­கிக் கொண்டு செல்­ல­வேண்­டி­யுள்­ளது. நாங்­கள் ஒன்­றி­ணைந்­தா­லும் எமக்கு மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யில்லை.

கேள்வி – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தொடர்ந்து கூட்­டாட்சி அர­ச­மைப்­பைக் கோரி வரு­வ­து­டன், தமது தேர்­தல் அறிக்­கை­யி­லும் இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட்­டாட்சி ஆட்­சியே அவ­சி­யம் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது சாத்­தி­யமா?
பதில் – அவர்­கள் கூட்­டாட்­சிக்­குச் சம­மான முறை­மை­யொன்­றையே வலி­யு­றுத்­து­கின்­ற­னர். நாங்­கள் கூறு­கின்­றோம். ஒற்­றை­யாட்சி கோட்­பாட்­டுக்கு பாத­கம் ஏற்­ப­டாத வகை­யி­லான தீர்­வையே. இதில் பொது­வான கார­ணி­கள் பல உள்­ளன. எங்­க­ளு­டைய நிலைப்­பாடு ஒற்­றை­யாட்சி கட்­ட­மைப்­பில் தீர்வு காண்­ப­தா­கும். ஒற்­றை­யாட்­சிக்­குப் பாத­கம் ஏற்­ப­டாத வகை­யில் அதி­கா­ரப்­ப­கிர்வை மேற்­கொண்­டால் பிரச்­சி­னை­யில்­லாது தேசி­யக் கொள்­கை­களை வகுத்து வேலை­க­ளைச் செய்­ய­மு­டி­யும். தேர்­த­லின் பின்­னர் இது தொடர்­பில் மீண்­டும் பேச்­சு­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும்.

கேள்வி – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அர­சி­யல் மேடை­க­ளில் அன்­று­மு­தல் இன்­று­வரை தெரி­விக்­கும் பிர­தான விட­யம்­தான் வடக்கு – கிழக்கு இணைப்பு. இது சாத்­தி­ய­மா­குமா?
பதில் – அத­னைச் செய்ய கிழக்­கில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யாக இல்­லையே. வடக்­கில் பெரும்­பான்­மையா என்று எனக்­குத் தெரி­யாது. கிழக்­கில் பெரும்­பான்­மை­யில்லை. பல­வந்­த­மாக இணைக்­க­மு­டி­யாது.

கேள்வி – முஸ்­லிம் மக்­கள் இணங்­கி­னால் இணைக்­கக்­கூ­டிய சாத்­தி­யங்­கள் உள்­ள­னவா?
பதில்; – அத­னைப் பார்க்­க­லாம். தற்­போது பெரும்­பான்­மை­யில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget