2018ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் பெற்றுக்கொள்ளும் கால எல்லை நாளை மறுதினம் (23) நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர் மூலமாகவும், தனியார் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் குறித்த விண்ணப்பதாரர் மூலமாகவும் எதிர்வரும் பெப்ரவரி 23ம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறித்த தினத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
Post a Comment