பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த உடன்படிக்கை தொடர்ந்தும் செல்லுபடியானதாக காணப்படுவதாகவும் உடன்படிக்கை இரத்து செய்யப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.மேலும் தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தேவை தற்போது இல்லை என தான் கருதுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை தமக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் தேசிய அரசாங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறித்த உடன்படிக்கை தொடர்ந்தும் செல்லுபடியானதாக காணப்படுவதாகவும் தாம் குறித்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பிரதமரின் கருத்து தொடர்பில் விளக்கமளிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டிக்கொண்டதற்கிணங்க அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.
Post a Comment