Ads (728x90)

புதிய அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலேயே அதிக மாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஜனாதிபதியினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

புதிய அமைச்சர்கள் நியமனத்தின் போது 40 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்கள்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 இந்தவகையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் கூடிய மாற்றத்தை ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

Post a Comment

Recent News

Recent Posts Widget