தியத்தலாவையில் பஸ் வண்டியொன்றில் கைக்குண்டு வெடித்த சம்பவம் தொடர்பில் கண்டறிய ஐவரடங்கிய குழுவொன்றை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நியமித்துள்ளார்.குறித்த சம்பவத்தில் 12 இராணுவத்தினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர்.
இராணுவ உறுப்பினர் ஒருவரின் பையிலிருந்த கைக்குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தீவிரவாத செயல் அல்ல என இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment