Ads (728x90)

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் வர்த்தமானி அறிக்கையில் தாம் கையெழுத்திட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொலவில்  நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்படி மோசடிகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில், மேலும் பல ஊழல் அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தமை அவதானிக்கத்தக்கது.

ஜனாதிபதியின் இந்த நியமனம் குறித்த அறிவிப்பு இன்று இரவு வர்த்தமானியில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget