Ads (728x90)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 69 ஆவது பிறந்த தினம் இன்று  கொண்டாடப்படுகின்றது.
 
பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள விகாரைகளிலும் ஏனைய பிற சமயத்தளங்களிலும் சமய நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வறியவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்வும், வசதியற்றவர்களுக்கு உணவுப் பொருட்கள், ஆடை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பனவும் இடம்பெறுகின்றன.
பிரதமருக்கு நல்லாசி வேண்டி முன்னெடுக்கப்படும் முக்கிய நிகழ்வு இன்று மாலை 5.00 மணிக்கு சேதவத்த புரான விகாரையில் இடம்பெறவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget