Ads (728x90)

இலங்கையிலுள்ள புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக கூறப்படும் பிரித்தானிய தமிழ் மன்றம் மற்றும் உலக தமிழ் மன்றம் என்பவற்றை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபுர்வ அமைப்புக்களாக அங்கீகரித்துள்ளது.

இந்த அமைப்புக்கள் இரண்டும் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளமைக்கான தகவல்கள் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட இரகசிய தகவல்களிலிருந்து தெரியவந்ததையடுத்து, கடந்த மஹிந்த அரசாங்கம் இந்த அமைப்புக்களை தடைசெய்திருந்தது.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் இந்த அமைப்புக்கள் மீதிருந்த தடையை நீக்கியமையினால், பிரித்தானியாவின் பொதுநலவாய செயலகமும் இந்த அமைப்புக்களை அங்கீகரித்துள்ளது.

அத்துடன், நாட்டின் வெளியே தமிழீழ அரசு எனும் அமைப்பையும் பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget