நாட்டில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.புகையிலை வரியை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுள்ளது. குளிர்பானங்களில் அடங்கியுள்ள ஒரு கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறவிடப்படுகிறது. இதற்கு அமைய சந்தையில் சீனி கலவை அற்ற குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்படுதாகவும் அமைச்சர் பாராளுன்றத்தில் நேற்று இடம்பெறும் விவாதத்தில் கூறினார்.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை தடுக்க சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கூட்டு எதிர்கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துலன குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.
Post a Comment