Ads (728x90)

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள் ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஆப்கானிஸ்தானில் தமது ராணுவப் படைகளை ஆயிரக்கணக்கில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அங்கு கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக, தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படையினர் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவப் படையினருக்கு தலைமை வகிக்கும் ஜெனரல் ஜான் நிக்கல்சன், ரஷ்யா குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து, பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக ரஷ்யா தரப்பில் கடந்த சில ஆண்டுகளாக தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதில் உண்மை இல்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிவராதி களுக்கு உதவுவதற்காகவே இந்தக் கட்டுக்கதையை ரஷ்யா உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக, தலிபான்களுக்கு ரஷ்யா சார்பில் நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தஜிகிஸ்தானுடன் போர்ப் பயிற்சி என்ற போர்வையில், ஆப்கன் தலிபான்களுக்கு ஆயுதங்களை ரஷ்ய ராணுவம் வழங்கி வருகிறது. இவ்வாறு ஜான் நிக்கல்சன் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget