Ads (728x90)

மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் நேற்றுமுன்தினம் முதல் சுற்று போட்டியில் மோதுவாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக நடால் அறிவித்தார்.

நடால் கூறும்போது,“மெக்சிகோ ஓபனில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக பயிற்சியின் கடைசி கட்டத்தில் என் காலில் கூர்மையான வலியை உணர்ந்தேன். இதனாலேயே இந்தத் தொடரில் இருந்து விலகுகிறேன்” என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget