Ads (728x90)

புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதனுள் 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் உள்ளடங்குகின்றன. நாட்டிலுள்ள அனைத்து உள்ளூர்மன்றங்களுக்கான பிரதிநிதிகள்  மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும்,   நூற்றுக்கு 25 வீத பெண் பிரதிநிதித்துவத்தில் காணப்பட்ட சிக்கல் நிலை காரணமாக புதிய உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதில்  சிக்கல் நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது இதற்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் இனி இவ்விடயத்தில் காலதாமதம் ஏற்படாது.

உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பது தொடர்பாக அனைத்து உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களுக்கும் ஆலோசணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறமுடியாத வகையில் உரிய முறையில் புதிய உள்ளுாராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget