Ads (728x90)

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் இன்­றைய கூட்­டத்­தில் பன்னாட்­டுச் சமூ­கம் கடு­மை­யான முடி­வு­களை எடுத்­தா­க ­வேண்­டும்.

இவ்­வாறு ஐ.நா. சபை­யி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் உல­கத் தமி­ழர் பேர­வை­யி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­றுள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், உல­கத் தமி­ழர் பேர­வை­யி­னர், ஐ.நா. சபை­யின் உத­விச் செய­லர் பெல்ட்­மனை நேற்று முன்­தி­னம் இரவு சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர்.

அதில் இலங்கை அரசு முன்­னேற்­ற­க­ர­மான பாதை­யில் செல்­ல­வில்லை என்று ஐ.நா.விடம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

“முக்­கி­ய­மாக இறு­திக்­கட்­டப் போரின் போதான பொறுப்­புக்­கூ­றலை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து இலங்கை அரசு தவறி வரு­கின்­றது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இன்று நடை­பெ­றும் விவா­தத்­தில், பன்­னாட்­டுச் சமூ­கம் இலங்கை தொடர்­பில் கடு­மை­யான முடி­வு­களை எடுக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­பட்­டது.”- என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை நாடு­க­ளின் சபை. அங்கு நாடு­களே தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ள­வேண்­டும். தாம் தங்­க­ளு­டைய பங்­க­ளிப்­பைச் செய்­வோம் என்று ஐ.நாவின் உத­விச் செய­லர் உறு­தி­ய­ளித்­தார் என்று சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொடர் ஜெனி­வா­வில் நடை­பெற்று வரு­கின்­றது. இன்று இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்­கையை ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சமர்­பிக்­க­வுள்­ளார். இதன் பின்­னர் உறுப்பு நாடு­கள் ஒவ்­வொன்­றும், தமது கருத்தை முன்­வைக்­க­வுள்­ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget