Ads (728x90)

பண்டிகைக் காலத்தில் நாடெங்கிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் முறையில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை களஞ்சியப்படுத்தி இருந்த மற்றும் விற்பனை செய்த 25 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் 512 சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டதாகவும், இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து 543 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் நாடெங்களிலும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலையங்களை சோதனையிட்டனர்.
இவற்றில் சுப்பர் மார்க்கெட்டுகள், சுற்றுலா ஹோட்ல்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிக்சாலைகள் என்பவும் உள்ளடங்கும். இவற்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Post a Comment

Recent News

Recent Posts Widget