இலங்கை, நியூசிலாந்து, கானா ஆகிய நாடுகள் பொதுநலவாய ஒன்றியத்தின் கடல் மாசடைவதை தடுக்கும் அமைப்பில் (CCOA) ஒன்றிணைந்திருப்தாக பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.பிளாஸ்ரிக்கினால் சூழல் மாசடைவதை தடுக்கும் பணியில் இவை ஒன்றிணைந்துள்ளாதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளை முன்னெடுப்பதற்காக 61.4 மில்லியன் ஸ்ரேலிங்பவுண்ஸ் நிதி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக பிரிட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டார்.
பொதுநலவாய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளில் இந்த பணிகளை மேற்கொள்வதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக இந்த நிதி செலவிடப்படவுள்ளது.
அபிவிருத்தியடைந்த 5 நாடுகள் இந்த இலக்குகளை அடைவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment