Ads (728x90)

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் இந்த வீடுகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளிடம் திறப்புகள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. இவற்றின் மூலம் வீட்டு நிர்மாணபணிகளுக்காக தேவையான வசதிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், இந்து சமய விவகார அமைச்சு ஆகியவையினால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget