பத்து நாட்களுக்குள் அனைவருக்கும் நிழல் என்ற தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 90 புதிய கிராமங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.எதிர்வரும் 20ம் திகதி அளவில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவற்றில் 30 கிராமங்கள் வடக்கு கிழக்கில் அமையவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.
சமகால அரசாங்கம் 2015ம் ஆண்டு தொடக்கம் இதுவரை 638 மாதிரி கிராமங்களுக்கான கட்டுமான வேலைகளை ஆரம்பித்தது. இதுவரை 56 கிராமங்கள் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 70 கிராமங்கள் அடுத்து வரும் வார இறுதி நாட்களில் மக்களிடம் கையளிக்கப்படும். அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசனைக்கு அமைய கிராம அபிவிருத்தித் திட்டம் அமுலாகிறது.
Post a Comment