பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தொடர்ந்து அதனுடன் தகவல் தொடர்பு இணைப்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் முறையாக செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே உள்ள கடற்படைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட உள்ளது, 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் அவர் பேட்டியில் கூறியதாவது: இந்த செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் தென் பகுதியில் முதல் முறையாக அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் ஜி.எஸ்.எல்.வி. எப்.08 - ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோளான ஜி.சாட்-6 ஏ செயற்கை கோள்கள் மற்றும் டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதனுடன் தொலை தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் தொலைதொடர்பை ஏற்படுத்திவிடுவோம்
சந்திராயன்-2 விண்ணுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பப்படும். இதில் ரோபோக்கள் பயன்படுத்தி நிலவில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இதற்கான சிறப்பு கருவியுடன் புளு டூத் மூலம் இணைப்பதால் மீனவர்களின் இருப்பிடம், மீன்வளம் மற்றும் சர்வதேச எல்லைக்கான எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளை மீனவர்கள் பெறமுடியும்.
இதனை சாதாரண பாமர மீனவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு கருவிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்
Post a Comment